Thursday, 19 November 2026
நாணய மாற்று 🍁 1 CAD
  • Rs LKR 232.27 ▼ 0.23%
  • ₹ INR 65.23 ▼ 0.24%
  • $ USD 0.6982 ▼ 0.19%
  • € EUR 0.6363 ▲ 0.02%
  • £ GBP 0.5307 ▲ 0.15%
  • A$ AUD 1.0390 ▲ 0.07%
புதுப்பிப்பு: 2026-11-18 23:13
வானிலை
5°C
மேகமூட்டம்
▲ 15° ▼ 3°
  • உணர்வு2°
  • ஈரப்பதம்79%
  • காற்று9 km/h
அண்மைச் செய்திகள்
கனடாவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து கனடா முழுவதும் இன்று அவசர எச்சரிக்கை ஒலி சோதனை சீனாவில் ட்ரம்பைச் சந்தித்த பிரதமர் மார்க் கார்னி – 20 நிமிடங்கள் நீடித்த பேச்சுவார்த்தை வரவு செலவுத் திட்டத்தை நிராகரிக்கக் கோரும் எதிர்க்கட்சி – மூன்றாவது நாளாக விவாதம் கனடா முழுவதும் இன்று அவசர எச்சரிக்கை ஒலி சோதனை  ரொனால்டோவுக்கு போர்த்துக்கல் அளிக்கும் அபூர்வ கௌரவம் – இனி 7ஆம் இலக்கம் கூட மாறுகிறது! தமிழ்த் தேசிய அரசியலின் துணிச்சலான குரல் ஓய்ந்தது! – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நள்ளிரவு காலமானார் 74 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் மைக்ரோசொப்ட் சேவைத் தடை — ரொறன்ரோ மருத்துவமனைகளிலும் மின்னஞ்சல் பாதிப்பு ஜென்சன் ஹுவாங் குறித்த செய்தியால் கவனம் பெற்ற கிம்பர்லி பவல் யார்? ஆர்க்டிக் பகுதியில் எண்ணெய், எரிவாயு அகழ்வுக்கு தடை – நீக்குவது குறித்து இன்னும் முடிவில்லை ; மார்க் கார்னி

விரிவாக்கப்படும் ஸ்ரீலங்கன் விமான சேவை – ஐந்து ஆண்டு திட்டம் குறித்து வெளியானது தகவல்

பகிர்FacebookWhatsAppXTelegram

ஸ்ரீலங்கா விமான சேவையை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் இருமடங்காக விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த காலப்பகுதியில் சுற்றுலாத்துறையை விரிவாக்குவதன் ஊடாக 10 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாகவும் ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ரிச்சர்ட் நட்டல் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாகவும் அதனை தனியார் துறைக்கு விற்பனை செய்யப் போவதாகவும் கடந்த அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.

என்றாலும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்வரும் 5 வருடங்களில் ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தது.

இந்தப் பின்புலத்திலேயே ரிச்சர்ட் நட்டல், ஸ்ரீலங்கன் விமான சேவையின் எதிர்கால இலக்கு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்

கொழும்பில் இடம்பெற்ற ஒரு நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் இந்த நிகழ்வில் தெரிவித்தாவது,

”கொரோனா தொற்றுக்கு முன்னர் இலங்கையில் 27 விமானங்கள் இருந்தன. தற்போது ஸ்ரீலங்கன் விமான சேவையில் 22 விமானங்களே உள்ளன. இதனை எதிர்வரும் 5 வருடங்களில் இருமடங்காக்கி 50 விமானங்களாக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இலக்கை அடைவதன் ஊடாக நாட்டின் சுற்றுலாத்துறை வருட வருமானத்தை 10 பில்லியன் டொலராக அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்.

2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மூன்று விமானங்களை ஸ்ரீலங்கன் விமான சேவையில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25-30 வீதத்தால் ஸ்ரீலங்கன் விமான சேவையின் திறனை அதிகரிக்க உத்தேசித்துள்ளோம்.” என்றார்.