கனடாவின் ரொறன்ரோவில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக பொது மக்கள் மற்றும் வாகன சாரதிகளுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவில் சுமார் 15 சென்டிமீட்டர் அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக கனடிய சுற்றாடல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதனால் வாகனங்களில் பயணம் செய்யும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வாகன சாரதிகளினால் வீதியை தெளிவாக பார்க்க முடியாத நிலை ஏற்படும்.

பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் காரணமாக பல்வேறு வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
பாதைகள், சுரங்கப் பாதைகள் வழுக்கும் தன்மையுடன் கூடியதாக இருக்கும். பயணங்களை மேற்கொள்வது சிரமமாகக் கூடும்.
எனவே வாகனங்களை மெதுவாக செலுத்துமாறு காவல்துறையினர் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
அத்துடன், பனி புயல் வீசும் நேரங்களில் வெளி பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் பொது மக்களை கனடிய சுற்றாடல் திணைக்களம் கொட்டுகொண்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ரொறன்ரோவில் பதிவான மிக மோசமான பனிப்பொழிவு நிலைமை இன்றைய தினம் பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

