யோஷிதவிற்கு எதிரான வழக்கு ஜூலை வரை ஒத்திவைப்பு

0
123
Article Top Ad

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டேஸி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, ஜூலை 11 ஆம் திகதி விசாரணைக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்படுமென கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டது.

இன்றைய  தினம் சந்தேக நபர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் டேஸி பொரஸ்ட் இருவரும் ஆஜரான நிலையில், அவர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெந்திஸ் ஆஜராகியிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனை கருத்தில் கொண்ட நீதவான், எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.