இலங்கை வருகிறார் IMFஇன் உயர்மட்ட அதிகாரி

0
107
Article Top Ad

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத், எதிர்வரும் 15ஆம், 16ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது, இலங்கையின் பொருளாதார நிலைமைகள், IMF இன் நிதி உதவி திட்டங்கள், மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அரசாங்க அதிகாரிகள், மத்திய வங்கி ஆளுநர், மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களுடன் IMF இன் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.