ஒஸ்ரியா பாடசாலை மீது துப்பாக்கிச்சூடு – 10 பேர் உயிரிழப்பு

0
123
Article Top Ad

ஒஸ்ரியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (10) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 7 மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் வியன்னாவின் 200 கி.மீ. தொலைவில் உள்ள கிராஜ் நகரிலுள்ள பாடசாலை மீது இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ஆசிரியர்களும் அடங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தப் பாடசாலையில் கற்ற முன்னாள் மாணவர் ஒருவரே இந்த நாசகார வேலையை செய்துள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அவரும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.