கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத்தர முடியாது : அமைச்சர் விஜித ஹேராத் உறுதி

0
16
Article Top Ad

“கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத்தரும் எண்ணம் இல்லை,” என இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேராத் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை வசம் உள்ள கச்சத்தீவு, கடந்த 1974ல் இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் ஆட்சியில், கடல்சார் ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இந்திய மினவர்கள் எல்லைத்தாண்டி வருவதால் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

கச்சத்தீவு இந்தியாவிடம் இருந்தால் இவ்வாறான கைதுகள் இடம்பெறாதென தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக கட்சிகள் தொடர்ந்து இந்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ‘மீன்பிடி உரிமைகளை விட்டுத் தந்ததே தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு காரணம் என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத், “மீனவர் பிரச்சினையை தீர்க்க நாங்கள் தூதரக அளவிலான பேச்சுக்கு தயாராக உள்ளோம்.

ஆனால், இலங்கை கச்சத்தீவை விட்டுக் கொடுக்க ஒருபோதும் ஒப்புக்கொள்ளது என்பது உறுதி. அது, சர்வதேச சட்டத்தால் நிறுவப்பட்டது,” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here