இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய திட்டம்

0
216
Article Top Ad

கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இனி தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தினை பெற்றுக்கொள்ள முடியும். இத்திட்டம் 2025 ஓகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்சமயம் இந்த திட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், அதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் முடிவடைந்ததும், திட்டத்தை அதிகாரபூர்வமாக செயற்படுத்தவுள்ளதாக திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

  • சுற்றுலாப் பயணிகளுக்கு 14 நாட்கள் அல்லது 30 நாட்கள் செல்லுபடியாகும் தற்காலிக சாரதி அனுமதிகள் வழங்கப்படும்.

  • இலங்கையில் நீண்ட காலம் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு, அதிகபட்சம் 8 ஆண்டுகள் செல்லுபடியாகும்சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

இலங்கையின் சுற்றுலா துறை, கொவிட்-19 பிந்தைய காலத்தில் மீட்பு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நாட்டுக்குள் சுயமாக வாகனங்களை செலுத்த விரும்பும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், இத்தகைய அனுமதிகள், சுற்றுலாத் துறையின் வசதிகர வளர்ச்சியை உறுதி செய்யும். இந்த புதிய முயற்சி, இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகளின் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.