M23 கிளர்ச்சியாளர்களும் கொங்கோ ஜனநாயகக் குடியரசும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து

0
224
Article Top Ad

கிழக்கு கொங்கோவில் நீடித்துவரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், கொங்கோ ஜனநாயகக் குடியரசும், M23 கிளர்ச்சியாளர்களும் கட்டாரில் முக்கிய அமைதி பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

தோஹாவில் நடந்த இந்த ஒப்பந்தம், அண்மையில் வொஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாகக் கையெழுத்தானது. இதில் இரு தரப்புகளும் எதிர்காலத்தில் நேரடி அமைதி பேச்சுவார்த்தைகளை நடத்த ஒப்புக் கொண்டனர்.

M23 கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதங்களில் பல பகுதிகளை கைப்பற்றியதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இதன் மூலம் பிராந்தியத்தில் பெரும் போருக்கான அபாயம் உருவாகியிருந்தது.

இந்த புதிய ஒப்பந்தம், மார்ச் மாதத்தில் கட்டாரில் இடம்பெற்ற கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஜனாதிபதிக்கும் ருவாண்டா பிரதிநிதிக்கும்  இடையிலான சந்திப்புக்குப் பிறகு உருவான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இதேவேளை, ஒப்பந்தம் தற்போது கிழக்கு கொங்கோவில் இருந்து M23 மற்றும் ருவாண்டா படைகள் வாபஸ் பெறும் விவரங்களை தெளிவுபடுத்தவில்லை. இருப்பினும், இரு தரப்பும் அனைத்து பிரதேசங்களிலும் அரசு அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆப்பிரிக்க ஒன்றியம் இந்த ஒப்பந்தத்தை “முக்கிய மைல்கல்” எனக் குறிப்பிட்டு வரவேற்றுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைகள் ஓகஸ்ட் 8ஆம் திகதிக்குள் ஆரம்பிக்க வேண்டும் என்றும், ஓகஸ்ட் 18க்குள் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்றும் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.