செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண பொதுமக்களுக்கு அழைப்பு

0
200
Article Top Ad

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்த மயானத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்ட உடைகள் உள்ளிட்ட பொருட்கள், ஓகஸ்ட் 5ஆம் திகதி பி.ப. 1.30 மணி முதல் 5 மணி வரை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன.

அவற்றை பார்வையிட்டு, குறித்த பொருட்களை அடையாளம் காணும் பட்சத்தில், நீதிமன்றத்திற்கு அல்லது குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சித்துப்பாத்தியில் மனித எலும்புக்கூடுகள் சகிதம் பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அவற்றை பொதுமக்களுக்கு காண்பித்து அதன்மூலம் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு பெற்றுக் கொள்வதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனித கொலை விசாரணை பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்றுக்கு செய்த விண்ணப்பத்தின் பிரகாரம் நீதிமன்றமானது அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.