செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொது மக்களின் உதவியை நாடும் தீர்மானம், இலங்கையில் உண்மை மற்றும் நீதி நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் நீண்டகாலமாக எதிர்ப்பாக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, இலங்கை அரசாங்கம் குறிப்பாக காணாமல் போனோர் அலுவலகம் தங்கள் பணியை வெளிப்படைத்தன்மையுடனும், விரைவாகவும், காணாமல் போனவர்களின் குடும்பங்களுடன் அர்த்தமுள்ள ஆலோசனையுடனும் நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றும் கூறியுள்ளது.
பல தசாப்தங்களாக தங்கள் அன்புக்குரியவர்களின் நிலை குறித்து அயராது திடமாக பதில்களை தேடிவரும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுடன், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் உறுதியாக நிற்கின்றது என்றும் அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

