சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது

0
199
Article Top Ad

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (6) கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர் இன்று காலை  கைது செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு நாடளாவிய போராட்டங்களின் போது தீக்கிரையாக்கப்பட்ட செவனகல-கிரியிப்பன் வேவ பகுதியில் உள்ள அரசாங்க நிலத்திற்கு, மற்றொரு நபர் மூலம் இழப்பீடு பெற்ற சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.