Thursday, 19 November 2026
நாணய மாற்று 🍁 1 CAD
  • Rs LKR 232.27 ▼ 0.23%
  • ₹ INR 65.23 ▼ 0.24%
  • $ USD 0.6982 ▼ 0.19%
  • € EUR 0.6363 ▲ 0.02%
  • £ GBP 0.5307 ▲ 0.15%
  • A$ AUD 1.0390 ▲ 0.07%
புதுப்பிப்பு: 2026-11-18 23:13
வானிலை
5°C
மேகமூட்டம்
▲ 15° ▼ 3°
  • உணர்வு2°
  • ஈரப்பதம்79%
  • காற்று9 km/h
அண்மைச் செய்திகள்
கனடாவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து கனடா முழுவதும் இன்று அவசர எச்சரிக்கை ஒலி சோதனை சீனாவில் ட்ரம்பைச் சந்தித்த பிரதமர் மார்க் கார்னி – 20 நிமிடங்கள் நீடித்த பேச்சுவார்த்தை வரவு செலவுத் திட்டத்தை நிராகரிக்கக் கோரும் எதிர்க்கட்சி – மூன்றாவது நாளாக விவாதம் கனடா முழுவதும் இன்று அவசர எச்சரிக்கை ஒலி சோதனை  ரொனால்டோவுக்கு போர்த்துக்கல் அளிக்கும் அபூர்வ கௌரவம் – இனி 7ஆம் இலக்கம் கூட மாறுகிறது! தமிழ்த் தேசிய அரசியலின் துணிச்சலான குரல் ஓய்ந்தது! – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நள்ளிரவு காலமானார் 74 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் மைக்ரோசொப்ட் சேவைத் தடை — ரொறன்ரோ மருத்துவமனைகளிலும் மின்னஞ்சல் பாதிப்பு ஜென்சன் ஹுவாங் குறித்த செய்தியால் கவனம் பெற்ற கிம்பர்லி பவல் யார்? ஆர்க்டிக் பகுதியில் எண்ணெய், எரிவாயு அகழ்வுக்கு தடை – நீக்குவது குறித்து இன்னும் முடிவில்லை ; மார்க் கார்னி

வடக்கு – கிழக்கு ஹர்த்தாலுக்கு ஜீவன், மனோ ஆதரவு

பகிர்FacebookWhatsAppXTelegram

வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்க்கவும், முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் ஓகஸ்ட் 15ஆம் திகதியன்று தமிழரசுக் கட்சி ஏற்பாடு செய்துள்ள ஹர்த்தாலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைத்தீவு சம்பவத்தைக் கண்டித்து முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு, இலங்கையராகவும், மலையகத் தமிழராகவும் தனது முழு ஆதரவை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.  நீதிக்கான கோரிக்கையிலும், இராணுவத்தின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடைபெறும் இந்த ஹர்த்தாலுக்கு தனது ஒற்றுமையையும் உறுதியான ஆதரவையும் வெளிப்படுத்துவதாகவும், யுத்தம் முடிந்து 16 ஆண்டுகளாகியும் இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்கள் நடைபெறுவது வருத்தமளிப்பதாகவும், இவற்றை ஏற்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மனோ வெளியிட்ட அறிக்கையில், பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். மேலும், வடக்கு – கிழக்கில் உள்ள மேலதிக இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

இன அடிப்படையிலான போர் செய்த இராணுவ வீரர்களின் மனங்களில் இனவாதம் உள்ளதாகவும், அவர்களை தென்னிலங்கைக்கு அழைத்து வந்து, குளம் வெட்டுதல், வீதி அமைத்தல், வீடு கட்டுதல், விருந்தகங்கள் நடத்துதல், தோட்டம் செய்தல், காய்கறி சந்தை நடத்துதல் போன்ற அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டுமெனவும் மனோ கூறியுள்ளார்.

முன்னைய அரசாங்கங்கள் செய்தவற்றை மாற்றி, மாற்றத்தை ஏற்படுத்தவே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் முன்னைய ஆட்சியாளர்களின் செயல்களைத் தொடர்ந்தால் அதனை எதிர்ப்போமெனவும் மனோ கணேசன் தெரிவித்தார்.