பாதுகாப்பு கருதி பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) கெமரா

0
165
Article Top Ad

தூரப் பிரதேசங்களுக்கு சேவை வழங்கும் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) கெமரா கட்டமைப்புகளை நிறுவும் திட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விபத்துகளைத் தடுக்கவும், பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் தொடக்க விழா, கதிர்காமத்தில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று (12 நடைபெற்றது.

முதற்கட்டமாக 40 பேருந்துகளில் இத்தகைய AI கெமரா கட்டமைப்புகள் பொருத்தப்படவுள்ளன. இக்கெமராக்கள், பேருந்து சாரதிகளின் நடத்தைகளை கண்காணித்து, தேவையான எச்சரிக்கைகளை உடனடியாக வழங்கும் திறன் கொண்டவை. குறிப்பாக, சாரதியின் சோர்வு, மயக்கம் அல்லது கண் மூடும் அறிகுறிகளை கண்டறிந்து, விபத்துகளை தவிர்க்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தூரப் பிரதேசங்களுக்கு சேவை வழங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் விரைவில் இத்தகைய செயற்கை நுண்ணறிவு கெமரா கட்டமைப்புகள் முழுமையாக பொருத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.