இலங்கையில் மனித உரிமைகள் மீறலுக்கு எதிரான நடவடிக்கை குறைவு – அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கை

0
162
Article Top Ad

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தீவிர சிக்கல்கள் தொடர்ந்து நிலவுவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது 2024ஆம் ஆண்டுக்கான உலகளாவிய மனித உரிமை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அறிக்கையில், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான அதிகாரிகளை அடையாளம் காணவும், அவர்களைப் பொறுப்புக்கூறச் செய்வதிலும் இலங்கை அரசாங்கம் மிகக் குறைந்த முயற்சிகளையே மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், தனிநபர்கள் மீது துப்பாக்கிச் சூடு, விளக்கமறியலின் போது நடந்த கொலைகள், ஊடகவியலாளர்களை துன்புறுத்துதல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 போராட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக மிகச் சிறிய அளவில் மட்டுமே நடவடிக்கை எடுத்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி கைது செய்வது, பெண்களை கட்டாய கருத்தடைக்கு உட்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளும் இடம் பெற்றுள்ளன.

இதேவேளை, 2024ஆம் ஆண்டில் 103 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், பொலிஸ் காவலில் 7 மரணங்களும் பதிவாகியுள்ளன எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும், காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான எந்தவொரு சம்பவமும் 2024ஆம் ஆண்டில் பதிவாகவில்லை என்றும், போரால் பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.