ரணில் விக்ரமசிங்கவிற்கு விளக்கமறியல்

0
101
Article Top Ad

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்டார்!

புதிய இணைப்பு – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவிடம் CID விசாரணை

அரசாங்க நிதியை தவறாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் விசாரணையில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்தின்போது ரணில் உட்பட வேறு சில அரச அதிகாரிகளும் அரச நிதியில் வெளிநாடு  சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக ஏற்கனவே சில அரச அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதோடு, அதன் ஒரு பகுதியாகவே இன்றைய விசாரணையும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.