ரணிலுக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென தெரிவிப்பு

0
103
Article Top Ad

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டுமென, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இன்னும் இரண்டு நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வேண்டும் என்றும், அதற்குப் பின்னர் அவர் விரும்பும் வைத்தியசாலையில் கிசிச்சை பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

காரணம், அறுவை சிகிச்சையை தேசிய வைத்தியசாலையில் செய்வதாயின்  காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டும் என்றும், சில நேரங்களில் 3 வருடங்கள்கூட செல்லலாம் என்றும் வைத்தியர் கூறியுள்ளார்.

அவருக்கு கரோனரி தமனிகளில் அடைப்பு, நீரிழப்பு என்பவற்றோடு இருதயம் பலவீனமாக உள்ளதாகவும், ஆகவே உடனே சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன மேலும் தெரிவித்துள்ளார்.

அரச நிதியை தனியார் பயணத்திற்கு பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 22ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரணிலுக்கு நேற்று பிணை வழங்கப்பட்டது. கைதுசெய்யப்பட்ட பின்னர், அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.