வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் ரணில்

0
90
Article Top Ad

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார்.

கடந்த 22ஆம் திகதிமுதல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (29) காலை அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மருத்துவமனையிலிருந்து வெளியேறியிருந்தாலும், மருத்துவ ஆலோசனையின் படி அவர் வீட்டில் ஓய்வெடுப்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், ரணில் விக்ரமசிங்க வீட்டில் இருக்கும்போது அவரது உடல்நிலை பற்றி குடும்ப வைத்தியர்கள் கண்காணிப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரச நிதியை தனியார் பயணத்திற்கு பயன்படுத்தியதாக தெரிவித்து கடந்த 22ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட ரணில், 26ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.