ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு செப்டெம்பர் 6ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க கட்சி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (31) நடைபெற்றுள்ளதோடு, எதிர்வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
விசேடமாக, ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சிகளின் தலைவர்களை நேரில் சென்று அழைப்பு விடுக்கவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.தே.க. தலைவர் ரணில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், கட்சி பேதம் இன்றி பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் அவரை சிறைச்சாலையிலும் வைத்தியசாலையிலும் சென்று சந்தித்தனர். அவரை விடுவிப்பதற்கான போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இம்முறை நடைபெறும் கட்சி மாநாடு பலம்பொருந்தியதாக அமையும் என்றும், முக்கிய அரசியல் நகர்வுகளை நோக்கி பயணிக்க வாய்ப்புண்டு என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

