தமக்கு ஆதரவாக செயற்பட்ட அனைத்து தரப்பினரையும் விரைவில் சந்திப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீடியோ பதிவொன்றினை வெளியிட்டுக் கூறியுள்ளார்.
தாம் கைதுசெய்யப்பட்ட போது, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது என ஒவ்வொரு தருணத்திலும் தமக்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தனக்கு ஆதரவாக செயற்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக ரணில் கூறியுள்ளார்.
அரச நிதியை தனியார் பயணத்திற்கு பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு, கடந்த ஓகஸ்ட் 22ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட ரணில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அச்சந்தர்ப்பத்தில் நோய்நிலை காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, கடந்த 26ஆம் திகதி பிணை வழங்கப்பட்டது. பிணை வழங்கப்பட்ட இரு தினங்களில் அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

