ஊழல் வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த ஒரு பிரபல தலைவரும் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் அமைச்சராக இருந்தபோது, சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் ஊழியர்கள் குழுவை தனது தனிப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஊழியர்கள் குழுவிடமிருந்து ஏற்கெனவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இதையடுத்து, சம்பவம் தொடர்பாக குறித்த எதிரணி தலைவரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.
இதற்கிடையில், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் இந்த ஆண்டு 10 அரசியல்வாதிகள் காவலில் வைக்கப்பட்டனர்.
அத்துடன், இந்த ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் எண்ணிக்கை மூன்று என்பது குறிப்பிடத்தக்கது.

