சீனாவில் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை தோற்கடித்து 80 ஆண்டுகள் ஆன நிலையில், பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பில் அதிநவீன போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகள், புதிய நீர்மூழ்கி ட்ரோன்கள் உட்பட சீனாவின் இராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றும் ஆயுதங்களும் இராணுவ தளவாடங்களும் இடம்பெற்றிருந்தன.
பீஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி ஜின்பிங்குடன், ரஷ்ய ஜனாதிபதி புட்டின், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உட்பட பலநாட்டு தலைவர்கள் பார்வையிட்டனர். முதல் முறையாக மூன்று தலைவர்கள் ஒன்றாக சந்தித்த அந்தக் காட்சி தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதேவேளை, அணிவகுப்பில் பங்கேற்காத அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சமூக ஊடகத்தில் சி ஜின்பிங்கை கடுமையாக விமர்சித்துள்ளார். “அமெரிக்காவிற்கு எதிராக நீங்கள் சதி செய்யும் போது விளாடிமிர் புடின் மற்றும் கிம் ஜாங் உன்னுக்கு எனது அன்பான வணக்கங்களைத் தெரிவிக்கவும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

