யாழ். பல்கலைக்கழக வேந்தராக பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல்

0
79
Article Top Ad

யாழ். பல்கலைக்கழக வேந்தராக பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வழங்கப்பட்ட இந்த நியமனத்திற்கான எழுத்து மூலமான கடிதம், ஓகஸ்ட் 27ஆம் திகதியிடப்பட்டு ஜனாதிபதியின் செயலாளர் குமநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது.

1966-1970ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்ற குமாரவடிவேல், பௌதீகத் துறையில் முதல் தர சிறப்புப் பட்டம் பெற்றுள்ளதோடு, பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் 1975 இல் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளார். 1976ஆம் ஆண்டு முதல் யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாற்றியுள்ளதோடு, 2006 – 2007 ஆம் ஆண்டுகளில், யாழ். பல்கலைக்கழக பதில் துணைவேந்தராக செயற்பட்டுள்ளார்.

2015 முதல் 2020 வரை அவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.