தடுப்புக் காவல் நிலையங்களில் CCTV

0
73
Article Top Ad

நாட்டிலுள்ள சகல தடுப்புக் காவல் நிலையங்களிலும் இவ்வருட இறுதிக்குள் சி.சி.டி.வி. கெமராக்களை பொருத்த திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, சகல போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியும் கெமராக்களை பொருத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சட்ட அமுலாக்கத்தில் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்கள் மீது கடந்த காலத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மரணங்கள் தொடர்பாக மனித உரிமைசார் அமைப்புகளும் சிவில் சமூகத்தவர்களும் கரிசனை வெளியிட்டு வந்தனர்.

அத்தோடு, போக்குவரத்து பொலிஸார் தமது கடமையிலிருந்து தவறுகின்றமை தொடர்பாகவும் பலர் பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.