இலங்கையில் விபத்துக்களை தடுக்க புதிய திட்டம்

0
78
Article Top Ad

பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரையிலும், முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்துவதற்கு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தீர்மானித்துள்ளது.

பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் வேனுடன் மணல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதி, அண்மையில் விபத்து நேர்ந்த்து. இதன் பின்னணியிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் சகல பிரதேச செயலகங்கள் ஊடாகவும் கடந்த 4ஆம் திகதி முதல் இதுகுறித்த தெளிவூட்டல் இடம்பெறுவதாகவும் அவர கூறியுள்ளார்.