ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் அங்கீகாரம்

0
86
Article Top Ad

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தில், அரசியலமைப்பின் எந்த விதிகளுடனும் முரண்பாடு இல்லை என உயர் நீதிமன்றம் தனது வியாக்கியானம் வழங்கியுள்ளது.

இன்றைய பாராளுமன்ற அமர்வில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, உயர் நீதிமன்றத்தின் இந்த வியாக்கியானத்தை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதனடிப்படையில், குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தை ரத்து செய்யும் மசோதாவை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கடந்த ஓகஸ்ட் 7ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பித்தார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது அவர்களின் மனைவிமார் பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் எந்தவொரு சலுகைகளுக்கும் அரசியலமைப்பு ரீதியாக உரிமையுடையவர்கள் என்றும், இந்த சலுகைகளை அதிகரிக்க முடியுமே தவிர, குறைக்க முடியாது என்று குறிப்பிட்டு இதற்கெதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குறித்த விசாரணை தொடரச்சியாக நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.