நேபாளத்தின் இடைக்கால பிரதமராக, முன்னாள் உயர்நீதிமன்ற தலைமைய நீதிபதியான சுசீலா கார்கி இன்று (12) பதவியேற்றுள்ளார்.
நேபாள நாட்டில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை மற்றும் அந்நாட்டு ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றிற்கு எதிராக இளைஞர்கள் 8ஆம் திகதிமுதல் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 51 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. உயிரிழந்தவர்களில் 21 பேராட்டக்காரர்களும் 3 பொலிஸாரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து நேபாளத்தின் பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இடைக்கால அரசின் தலைவராக முன்வழியப்பட்டவர்களில் இளைஞர்களின் ஆதரவு பெற்ற நேபாளத்தின் முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக பதவியேற்றார்.
இதேவேளை, வன்முறையை பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் சிறைகளில் இருந்து 12500 கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர். இவர்களை கைதுசெய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

