காற்றாலை திட்டத்தை எதிர்த்தவர்கள் மீது தாக்குதல் – கடையடைப்புக்கு அழைப்பு

0
66
Article Top Ad

மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் திட்டத்திற்கான உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், குறித்த திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

முதற்கட்டமாக காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை மக்கள் நேற்றிரவு தடுக்க முயன்றபோதிலும், அவர்களின் எதிர்ப்பை மீறி உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டன. நள்ளிரவு 12 மணியளவில் இரண்டாவது காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டபோது, பொதுமக்களும் அருட்தந்தையர்களும் வீதிகளில் இறங்கி தடுக்க முயன்றனர்.

இதன்போதே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அருட்தந்தை ஒருவர்மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வரும் திங்களன்று மன்னாரில் முழுமையான நிர்வாக முடக்கலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.