தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்ட அசம்பாவிதம் தொடர்பாக உறவினர்கள் வைத்தியசாலைக்கு முன்பும், பிணவறைக்கு முன்பும் கண்ணீர் மல்க காத்திருக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக நடிகர்களும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகை ஓவியா தனது இன்ஸ்டா பக்கத்தில், “arrest vijay’ என பதிவிட்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களுக்காக தனது இரங்கலை பதிவுசெய்துள்ள நடிகர் சத்தியராஜ், தவறு செய்தவன் திருந்த பார்க்க வேண்டும் என்றும், தப்பு செய்தவன் வருந்தி ஆகவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தப்பு சிறியதாக இருக்கும்போதே திருத்திக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள சத்யராஜ், தெரியாமல் நடந்திருந்தால் அது மீண்டும் இடம்பெறாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என நாசுக்காக குறிப்பிட்டுள்ளார்.
கரூரில் விஜய் நேற்று நடத்திய தேர்தல் பிரச்சார கூடத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 40ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

