காசா சமாதான ஒப்பந்தம் அறிவிப்பு – வெற்றியளிக்குமா?

0
28
Article Top Ad

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இணைந்து காசாவுக்கான புதிய சமாதான திட்டத்தை அறிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தை ஹமாஸும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய திட்டம் உடனடி இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என முன்மொழிகிறது. ஹமாஸின் கட்டுப்பாட்டில் உயிருடன் உள்ளதாகக் கூறப்படும் 20 இஸ்ரேலியர்களும், உயிரிழந்ததாகக் கருதப்படும் பலரின் உடல்களும் 72 மணி நேரத்திற்குள் விடுவிக்கப்படுமானால், அதற்குப் பதிலாக இஸ்ரேலில் சிறைபிடிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான காசா மக்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளின் போது ஹமாஸுக்கு வெள்ளை மாளிகை தயாரித்த 20 அம்சங்களைக் கொண்ட திட்டம் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்தை ஹமாஸ் மறுபரிசீலனை செய்வதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

நெதன்யாகுவுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தை அறிவித்த ட்ரம்ப், ஹமாஸ் இதனை ஏற்கவில்லை என்றால், இஸ்ரேலுக்குஅவர்கள் செய்யும் அனைத்திற்கும் முழு ஆதரவையும் வழங்குவதாக கூறியுள்ளார்.