மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி அதிரடி கைது

0
62
Article Top Ad

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி இவ்வாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருப்பினும் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

அதேவேளை, சட்டவிரோத சொத்துக்களை வைத்திருப்பது தொடர்பான ஒரு சம்பவத்தில் வாக்குமூலம் அளிக்க கடந்த ஆண்டு டிசம்பரில் நெவில் வன்னியாராச்சி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.