ஒரு இனத்தின் கோடாரி காம்பாக இருக்கமாட்டேன் – அர்ச்சுனா எம்.பி.

0
25
Article Top Ad

தனது இனத்திற்கு எதிராக செயற்படும் அரசாங்கத்துடன் இருந்துகொண்டு ஒரு இனத்தின் கோடாரி காம்பாக ஒருபோதும் இருக்கமாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

தனியார் வானொலியொன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இனப்பிரச்சினை தொடர்பில் எந்த அரசாங்கம் கலந்தாலோசித்து அதற்குத் தீர்வு வழங்க முற்படுகிறதோ, அந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய அரசியல் மிகவும் வெளிப்படையானது எனக் குறிப்பிட்டுள்ள அர்ச்சுனா, சிவில் குழுக்கள் தன்னுடன் இணைந்து செயற்படலாம் என்றும் கூறியுள்ளார்.

நாட்டிலுள்ள தமிழ், சிங்கள மற்றும் இஸ்லாமிய மக்கள் ஒன்றாக வாழ்வதற்கு, உண்மையான தமிழ் பிரதிநிதி என்ற வகையில் கடமையாற்ற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.