தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தும் மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம்

0
56
Article Top Ad

இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம், இன்று முதல் தனது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம், துறைசார் அமைச்சரின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் பங்கேற்பது போன்றவற்றைத் தவிர்ப்பதாக  அதன் செயற்குழு உறுப்பினர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்தார்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் கடந்த ஓகஸ்ட் 26 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதி முதல் மின்சார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, மீண்டும் ஒருமுறை மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக மின்சார பயனாளிகள் சங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.