ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிக்க 8 கோடி ரூபாய்

0
60
Article Top Ad
இலங்கையின் எட்டு ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிப்பதற்காகக் கடந்த 2024 ஆம் ஆண்டில் மாத்திரம் 8 கோடியே ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 422 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவருடாந்த செயலாற்றுகை அறிக்கையில் உள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், அநுராதபுரம், கண்டி, மஹியங்கனை, நுவரெலியா, கதிர்காமம், பெந்தோட்டை, மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளுக்கே இவ்வளவு தொகை செலவாகியுள்ளது.
இந்த எட்டு மாளிகைகளிலும் 392 பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் 16 சிவில் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.