பதவியை துறந்தார் பிரான்ஸ் பிரதமர்

0
64
Article Top Ad

பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகுர்னு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இன்று (06) காலை ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், அவர் இதனை அறிவித்துள்ளார்.

பிரேன்கொய்ஸ் பெய்ரூவின் முந்தைய அரசாங்கம் சரிந்த பின்னர், லெகுர்னு பிரதமரானார். எனினும், 26 நாட்களுக்குள் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, அமைச்சரவையை நியமித்த சில மணி நேரங்களில் அவர் பதவி விலகியுள்ளார். இது நாட்டின் நீண்டகால அரசியல் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.