முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் அவர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை மதிப்பிட்டு அறிவித்தால், அவருக்கான பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதென பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டம் அமுலுக்கு வந்ததன் அடிப்படையில் அவர்கள் வசித்த வீடுகள் மீளப் பெறப்பட்டன. அத்தோடு, மஹிந்த பயன்படுத்திய குண்டு துளைக்காத வாகனங்கள் அண்மையில் கையளிக்கப்பட்டன. இதன் பின்னர் மஹிந்தவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என அவரது தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நிலைமைகளை மதிப்பீடு செய்ததன் பின்னர், பாதுகாப்பு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என அரசாங்கம் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

