இலங்கை பெருமை சேர்த்த வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர்

0
18
Article Top Ad

இந்தியாவில் இடம்பெற்ற நான்காவது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களை வரவேற்பதற்காக விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே, பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை 16 தங்கப் பதக்கங்கள், 14 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தமாக 40 பதக்கங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.