யாழ்ப்பாணத்து பெண் கனடாவில் வரலாற்று வெற்றி

0
14
Article Top Ad

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகரில் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, டார்லிங்டன் (Darlington) பகுதியில் கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) நகர சபைக்கு மிலானி தியாகராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டுள்ள நிலையில், இவ்வெற்றியுடன் கியூபெக், நகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழ் அரசியல்வாதி என்ற வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார்.

‘அன்சாம்பில் மொன்ட்ரியல்’ (Ensemble Montréal) கட்சியின் உறுப்பினராக மிலானி தியாகராஜா, இணைந்து பாதுகாப்பான அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு டார்லிங்டன் மாவட்டத்தை கட்டியெழுப்பும் வாக்குறுதியுடன் பிரசாரத்தில் இறங்கினார்.

கனடா சேவை மையத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிய இவர், மக்களுக்கு சேவை செய்வதில் நீண்ட அனுபவம் பெற்றவர்.

தனது வெற்றியையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மிலானி தியாகராஜா, “இது ஒரு வெற்றி மட்டுமல்ல, ஒரு புதிய தொடக்கம்.

டார்லிங்டனில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரின் குரலும் மதிக்கப்படும், பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என்பதை உறுதிசெய்கிறேன்.

நமது சமூகத்தின் இணைப்பை வலுப்படுத்தியே இந்தப் பணியை மேற்கொள்வேன். நகரத்தின் தூய்மை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்தல், மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்தல். வீடற்றவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here