நான் ஹிட்லரென்றால் நீங்கள் ரஷ்யாவா – அநுரவின் வரவு – செலவுத் திட்டம் குறித்து ஒரு பார்வை

0
58
Article Top Ad

என்னை ஹிட்லர் என்று கூறும் நீங்களெல்லாம் ரஷ்யாவா இல்லை அமெரிக்காவா என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்க்கட்சிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுர குமார திஸாநாயக்க இன்று முன்வைத்து உரையாற்றினார்.

இதன்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு எதிர்க்கட்சிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி அநுர அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் பேரணியை நடத்துவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன்போது, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்டோர் தற்போதைய ஆட்சியை சர்வாதிகார ஆட்சிக்கும், ஜனாதிபதி அநுரவை ஹிட்லருக்கும் ஒப்பிட்டு கருத்துக்களை வெளியிட்டு பேரணிக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

இந்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஜனாதிபதியின் இன்றைய கருத்து அமைந்திருந்தது. எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து எப்படியான நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் எங்களது கொள்கையில் மாற்றம் இல்லை. சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும்.

மக்களுக்கு அநீதி ஏற்படுத்தும் செயற்பாடுகள், ஊழல் மோசடிகள் உள்ளிட்டவற்றிற்கு எதிராக நாம் தீவிரமாக செயற்படுவொம். இதற்காக எம்மை ஹிட்லர் என்று குறிப்பிட்டாலும் அது எமக்கு பிரச்சினையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எல்லை நிர்ணயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தேர்தலை நடத்தும் திகதியை உறுதியாக கூற முடியாது.

தற்போதுள்ள சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டியுள்ள தேவையுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்புகள் சில….

* அரச நிர்வாகத்தை மறுசீரமைக்கவும், டிஜிட்டல் மயப்படுத்தவும் அடுத்தாண்டு பல திட்டங்கள் நடைமுறை

* இலத்திரனியல் ஆவணப்படுத்தல் திட்ட ஆரம்பம்

* 2025 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்குரிய ஒழுக்க தாபனக் கோவை ஒன்றை உருவாக்க குழு நியமனம்

* 2026 மார்ச் மாதமளவில் டிஜிட்டல் முறைமையிலான சொத்து வெளிப்படுத்தல் கட்டமைப்பு அறிமுகம்

2026 வரவு செலவுத் திட்டம் : இதுவரையான ஜனாதிபதி அநுரவின் முன்மொழிவுகள் | Sri Lanka Budget 2026

* 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில் 823 மில்லியன் டொலர் நேரடி முதலீடு கிடைக்கப் பெற்றுள்ளது

* வரி வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் மூலோபாய திட்ட முறைமை சட்டம், துறைமுக நகர சட்ட திருத்தம்

* அரச வரி திரட்டலை உறுதியாக பேணுவதுற்கு தேசிய கணக்காய்வு சட்டம் அடுத்தாண்டு முதல் திருத்தம்

* அரச – தனியார் பங்குடைமையுடன் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும்

* கைச்சாத்திடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மறுசீரமைக்க விசேட குழு நியமனம்

* வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொள்ளவும், முகாமைத்துவம் செய்யவும் சகல அமைச்சுகள் ஊடாகவும் விசேட நடவடிக்கைகள்

* 2032 ஆம் ஆண்டளவில் இலங்கையின் கடன் பெறும் எல்லை 90% குறைவாக நிலைப்படுத்தப்படும்

* கடன் மறுசீரமைப்பை தொடர்ந்து 2028 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு கடன்கள் செலுத்தப்படும்

* 2024 ஆம் ஆண்டுக்கு இணையாக 2025 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டு அரசமுறை கடன்கள் செலுத்தப்பட்டுள்ளன

* 2025 ஆம் ஆண்டு முதல் 10 மாதகாலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக 1933 மில்லியன் டொலர் கடன்பற்று பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன

* 2026 ஆம் ஆண்டு அரச வருமானம் 15.3% ஆக பதிவு, 2027 ஆம் ஆண்டு 15.4% அதிகரிக்க உத்தேசம்

* டிஜிட்டல் பொருளாதாரம் ஊடாக அடுத்தாண்டு 15 பில்லியன் டொலர் வருமானம் திரட்ட திட்டம்

* 2026 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை

* இலங்கையின் பண்ட ஏற்றுமதி இந்தாண்டு 9.1 சதவீதத்தால் அதிகரிப்பு

* நிறைவடைந்த 10 மாத காலப்பகுதியில் கொழும்பு பங்குச்சந்தையின் நிதி செயலாற்றுகை வளர்ச்சிப்பெற்றுள்ளது

* நேரடி மற்றும் மறைமுக வரி வட்டி வீதத்தை 40-60 சதவீதமளவில் பேண எதிர்பார்ப்பு

* 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறை 5.2 % குறைவடையும்

* சிறப்பு சலுகைகளுக்கு பதிலாக நியாயமான அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்

* 2026 முதல் காலாண்டில் கொழும்பு துறைமுக நகர சட்டம் மறுசீரமைக்கப்படும்

* அரச – தனியார் பங்குடைமை கண்காணிப்பு சட்டமூலம் அடுத்தாண்டு முதல் காலாண்டுக்கு சமர்ப்பிக்கப்படும்

* பிரதான கைத்தொழில் வலயங்களை அண்மித்த பகுதியில் சேவை வலயங்களை அமைக்க 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

* திகன, நுவரெலியா ஆகிய பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப முதலீட்டு வலயங்கள் அமைக்கப்படும்

* வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரே இடத்தில் சேவை வழங்கும் திட்டத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

* காணி தொடர்பான தகவல் கட்டமைப்பை உருவாக்க 100 மில்லின் ரூபா ஒதுக்கீடு

அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து ஹிட்லரை தோற்கடித்ததுபோல, எதிரணிகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சர்வாதிகார பயணத்துக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டுமென எதிரணிகள் விடுத்த அறைகூவலுக்கு பாதீட்டு உரையில் பதிலடி கொடுத்துள்ளார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க.

மக்களுக்கு அநீதி இழைத்திருந்தால், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் தண்டனை வழங்குவோம். அதற்கு எந்த பெயர் சூட்டினாலும் பரவாயில்லை. எமது நடவடிக்கையை கைவிடமாட்டோம்.” – என்றார் ஜனாதிபதி அநுர.