எதிர்க்கட்சிகள் இணைந்து நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடயில் நடத்தவுள்ள அரச எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கமாட்டார்.
தங்காலையில் தன்னை தினமும் சந்திக்க வரும் மக்களை தவற விட முடியாது என்றும், நுகேகொடைக்கு பயணிக்க அதிக நேரம் செலவாகும் என்பதாலுமே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பங்கேற்காவிட்டாலும் இந்த பேரணிய ஏற்பாடு செய்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைவதாக மஹிந்த கூறியுள்ளார்.
அரச எதிர்ப்பு பேரணிக்காக கட்சிகளையும் பிரமுகர்களையும் ஒன்றுதிரட்டும் முயற்சியில் எதிரணியினர் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக, நேற்று முன்தினம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்கு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

