தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சினையில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

0
66
Article Top Ad

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சமீபத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் இரு நாடுகளிலும் பெரும் பாதுகாப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. எனினும், இதனால் இலங்கைக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லையென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நேற்று11 ஆம் திகதி இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 9 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். இதே நாளில் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலிலும் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இவ்விரு அண்டை நாடுகளிலும் ஒரே நாளில் இடம்பெற்ற இந்த தாக்குதல்கள் பிராந்திய பாதுகாப்பு குறித்து கவலைக்கிடமான நிலையை உருவாக்கியுள்ளன. இதனால் இலங்கைக்கும் இதேபோன்ற அச்சுறுத்தல் உருவாகுமா என்ற கேள்வி எழுந்தது.

எனினும், அவ்வாறான சூழ்நிலை இல்லையென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

நாட்டின் புலனாய்வுப் பிரிவுகள் தீவிரமாக செயற்படுவதால், பாதுகாப்பு குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லையென தெரிவித்துள்ள அமைச்சர், தற்போது அத்தகைய அச்சுறுத்தல் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றும், பாதுகாப்புப் படைகள், குறிப்பாக முப்படைகள் மற்றும் பொலிஸார், தேசிய பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்துகின்றனர் என்றும் கூறியுள்ளார்.