தொழிலாளர்களுக்கு பட்ஜெட் நன்மையளிக்குமாயின் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது – இராதாகிருஷ்ணன்

0
75
Article Top Ad

பெருந்தோட்ட தொழிலாளர்களினால்தான் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளோம். அவ்வாறு இருக்கையில், வரவு செலவுத் திட்டத்தில் அவர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமாயின் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று இடம்பெற்று, அது நிறைவேற்றப்பட்டது. இதற்கு மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். இதுகுறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இராதாகிருஷ்ணன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் அறிவித்துவிட்டே ஆதரவு வழங்கியதாக கூறியுள்ள இராதாகிருஷ்ணன், இதனால் அரசாங்கத்துடன் இணைவோம் என நினைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.