Article Top Ad
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தல் மற்றும் இலங்கையின் சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

