காலநிலை மாற்றப் போராட்டத்திலிருந்து கியுபெக் பின்செல்கின்றதா?

0
224
Article Top Ad

கியுபெக் மாகாண அரசின் புதிய சட்டமூலமானது, மாகாணத்தின் காலநிலை மாற்றப் பொறுப்பை குறைக்கக்கூடும் என்ற அச்சத்தை சுற்றுச்சூழல் அமைப்புகள் வெளியிட்டுள்ளன.

சுமார் 1.8 பில்லியன் டொலர் அதிகப்படியான நிதியை கொண்டுள்ள பசுமை நிதி (Green Fund) முழுமையாக காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாக இருந்தாலும், புதிய சட்டமூலத்தின் பிரிவு 7-ன் கீழ், அந்த நிதியின் அதிகப்படியான தொகையை மாகாணத்தின் கடனை அடைக்கவும் எரிபொருள் வரி குறைப்பது போன்ற தொடர்பில்லாத செயல்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில், கியுபெக் மாகாண அரசு காலநிலை இலக்குகளிலிருந்து பின்வாங்குவதையே இச்செயற்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன என  விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து கியுபெக் Solidaireஇன் இணை பேச்சாளர் ரூபா கஜால் குறிப்பிடுகையில், “காலநிலை நெருக்கடியான தருணத்தில் பசுமை நிதியை வேறு செலவுகளுக்கு திருப்புவது முற்றிலும் பொறுப்பில்லாத செயல்” என்று கடுமையாக விமர்சித்தார்.

கியுபெக் ஏற்கனவே தன் உமிழ்வு குறைப்பு இலக்குகளை அடைவதில் பிந்தங்கியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை அரசின் காலநிலை உறுதிப்பாட்டை மேலும் பலவீனப்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் விலைகளை குறைக்க பசுமை நிதியை பயன்படுத்துவது தன்னைத் தகர்த்துக்கொள்ளும் செயலாகும் என லாவல் பல்கலைக்கழக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அரசின் நடப்புக் திட்டத்தில் நம்பிக்கை இழந்த சுற்றுச்சூழல் குழுக்கள், “வருங்காலத் தலைமுறைகளைப் பற்றிக் கவலைப்படுவதாகக் கூறும் அரசு, காலநிலை நடவடிக்கையில் தீவிரம் காட்டவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது” என்று தெரிவிக்கின்றன.

கியுபெக்கின் புதிய காலநிலை இலக்குகள் விரைவில் வெளியிடப்படும் நிலையில், அரசு எந்த திசையில் செல்கிறது என்பது குறித்து எதிர்பார்ப்பும் கவலைகளும் அதிகரித்துள்ளன.