பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை (நீக்குதல்) தொடர்பான சட்டமூலத்திற்கு அனுமதி

0
50
Article Top Ad

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை (நீக்குதல்) தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

1971 ஆம் ஆண்டு தேசிய அரச சபையின் இலக்கம் 1 கொண்ட பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை ரத்து செய்யும் நோக்கில், 2025-06-16 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளித்த அனைத்து இலங்கையர்களுக்கும் அரசாங்கம் அளித்த வாக்குறுதியின்படி, பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய உரிமையை ரத்து செய்வதே இந்தச் சட்டமூலத்தின் நோக்கம். இதற்கு சட்டமா அதிபரின் அனுமதி பெறப்பட்டு உள்ளது.

இதன்படி, குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், அதன் பின்னர் பாராளுமன்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.