Article Top Ad
தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு, இன்று (20) தங்காலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இந்நாட்டின் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில், நாடு முழுவதும் ஒன்பது மாகாணங்களில் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒக்டோபர் 30 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

