மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விமானி உயிரிழப்பு

0
103
Article Top Ad

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்திற்குள்ளானதில், அதன் விமானி உயிரிழந்தார்.

லுணுவில பகுதியில் இந்த விபத்து இன்று சம்பவித்தது.  இதில் படுகாயமடைந்து மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விமானி உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மேலும் நால்வர் தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.