நிலைமை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் – ஜனாதிபதி

0
111
Article Top Ad

இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போதும், அவற்றைக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகள் உருவாகும் போதும், அவசரகால செயற்பாடுகளை நிர்வகித்தல், இயல்பு நிலைக்கு மீளுதல் மற்றும் முன்பைவிட மேம்பட்ட நிலையில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புதல் ஆகிய மூன்று கட்டச் செயன்முறைகளுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும். நிலைமை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் தயார் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்தோடு, தற்போதுள்ள அனர்த்த நிலையை நிர்வகித்து, வேகமான, வினைத்திறனான மீள்நிர்மாணத்திற்குத் தேவையான சட்டப் பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளின் தேவைகளுக்காகவே அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், இது அனர்த்த முகாமைத்துவத்திற்கும், வினைத்திறனாக நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், வேறெந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படாது என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.