Article Top Ad
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால், 5 மாவட்டங்களில் மண்சரிவு அபாயத்தை கருத்தில் கொண்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (05) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில், மேலும் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 150 மிமீக்கும் அதிகமான மழை வீழ்ச்சியினால், சரிவுகள் இடிந்து விழுதல், பாறைகள் புரளுதல், நிலம் தாழிறங்குதல் மற்றும் மண்திட்டு சரிதல் போன்ற அபாயங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால், பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு விலகி செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் சிவப்பு எச்சரிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிரதேசங்கள்:
கண்டி மாவட்டம்
- கங்கவட்ட கோரளை
- தெல்தோட்டை
- தொழுவ
- தும்பனே
- மெததும்பர
- மினிப்பே
- பாதஹேவாஹெட்ட
- யட்டிநுவர
- கங்கா இஹல கோரளை
- அக்குரணை
- உடுநுவர
- பன்வில
- பாததும்பர
- குண்டசாலை
- பஸ்பாகே கோரளை
- ஹதரலியத்த
- உடுதும்பர
- பூஜாப்பிட்டிய
- ஹரிஸ்பத்துவ
- உடபலாத
கேகாலை மாவட்டம்
- கலிகமுவ
- கேகாலை
- மாவனல்லை
- ரம்புக்கனை

