தமிழகத்திலிருந்து இலங்கைக்கு 950 தொன் உதவிப் பொருட்கள்

0
61
Article Top Ad

டிட்வா புயல் தாக்கத்தால் கடுமையான இழப்புகளைச் சந்தித்துள்ள இலங்கைக்காக தமிழக அரசு பெருமளவிலான நிவாரண உதவி பொருட்களை அனுப்பியுள்ளது. மொத்தம் 950 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்கள் தமிழக மக்களின் சார்பில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சென்னை துறைமுகத்தில் இருந்து அனுப்பப்படும் இந்த உதவிக்கான கப்பலை இன்று (06) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களில்:

  • 10,000 போர்வைகள்

  • 10,000 துண்டுகள்

  • 5,000 வேஷ்டிகள்

  • 5,000 சேலைகள்

  • 1,000 தார்பாலீன்

  • 650 தொன் பருப்பு, சர்க்கரை, பால்மா

  • தூத்துக்குடியில் இருந்து கூடுதலாக 300 தொன் பருப்பு மற்றும் சர்க்கரை

என பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.