சீரற்ற காலநிலை: உயிரிழப்பு 611 ஆக உயர்வு – 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

0
46
Article Top Ad

சீரற்ற காலநிலையால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று மதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் 213 பேர் காணாமல் போய் இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் 25 மாவட்டங்களில், மொத்தம் 576,626 குடும்பங்களைச் சேர்ந்த 2,054,535 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதில், 33,622 குடும்பங்களைச் சேர்ந்த 114,126 பேர் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 956 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், உட்கட்டமைப்பு மற்றும் வீடமைப்பு சேதமும் கணிசமாக உயர்ந்துள்ளது. மொத்தம் 4,309 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன; மேலும் 69,635 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.